Monday 18 November 2013

விழியிலாக் கனவு



கண்கள் கலங்கிய பொழுது
கண்ணீரும் இல்லையடி
காலமும்தான் கரைந்ததடி
கன்னி உந்தன் நினைவினிலே

கரைந்த காலமெல்லாம்
பனிப்பாறையாய் நின்றிட
பருவமே உந்தன் பாசம் மட்டும்
பாறையில் பொறித்ததாயிற்றே
இந்த இளகியவன் நெஞ்சினிலே


விழியின்றியே 
விண்ணுலகம் வரை 
கனவு காண்கிறேன் 
நான்....


காதல் உளி கொண்டு
எனைக் கடைந்தெடுத்தவளே
நீ பறித்துச் சென்ற 
விழிகளை மட்டும் 
இறுதிவரை தரவேயில்லை 

Saturday 2 November 2013

நீ எந்தன் தாய்மையாக...

 நான் எத்தனை முறை 
உன்னால் அவமானப்படுத்தப்பட்டாலும்
ஆறுதல் தேட
உன் மடித்தேடியே
பயணிக்கிறது
என் மனம்...


உனது இலவம்பஞ்சு
விரல்களால் 
என் மார்பை 
கிழித்தப்போதும்
உன் மார்பின் 
அரவணைப்பிற்க்காகவே
அங்கலாயிப்பு கொள்கிறது
என் மனம்...

என் காதலை உதறிய
உனது கைகளையே
என்றும் பற்றிக்கொள்ள
ஏங்குகிறது
என் மனம்...

உன்னைச் சுற்றும்
குழந்தையாக...

நீ எந்தன் 
தாய்மையாக...

தேடலில் என் மனது....


தனிமையின் புலம்பலில்
தறிகெட்டு ஓடுகிறது
உந்தன் நில்லாத
நினைவுகளும்
நீடுயிர் காதலும்

காலில் இருந்து
ஒலிக்கும் கொலுசு
ஒலி மட்டும் தான்
என் காதினில்
பயணிக்கிறது

உன் பூப்பாதங்களை மட்டுமே
இக்குருடனின் கண்கள்
காண்கின்றன

கூந்தல் கொண்ட பூக்களும்
கூத்தாடி மகிழ்கிறது
உன்னை உடுத்திக்கொண்ட
சேலையும் சோலையாய்
சிரிக்கிறது

கூட்டத்தில் தனித்த
சிறு குழந்தை
தன் தாயின்
ஆள்காட்டி விரலை
தேடித் தேடி
அலைகிறது

மனப்பக்குவம் மறந்த
என் மனது....

வரம் கொடு இறைவா...





பிரித்தறியும் வரம் கொடுத்த
பரம்பொருளே...
மண்டியிட்டு மன்றாடுகிறேன்

ஆறறிவு படைத்ததோடு
ஏழாம் அறிவையும்
படைத்துவிடு...

சேர்த்தறியும் பண்பையும்
பெற்றுவிடுவான்
மனிதன்...

வறுமை ஒழிப்பு


'வறுமை ஒழிப்பு'
அரசியல்வாதிகளின்
தேர்தல் அறிக்கையில் மட்டும்
பிரசுரிக்கப்படுகிறது

ஒவ்வொரு தேர்தலிலும்

மறுபடியும் பிறப்பேனா ...........?

நினைக்கிறேன்
நான் நினைக்கிறேன்
வாலிப வயதில்
மீண்டும் ஒரு முறை
நான் கருவறையில்
கருக்கொண்டிருக்கிறேன் 
என்று...

ஆம்...

நான் மறுபடியும்
பிரவேசிக்க;

உனது காதலால்

அவள் ஒரு தீவிரவாதி

 தீவிரவாதம் புரிகிறாள் - அவள்
தீவிரமாக காதல் விவாதமும் புரிகிறாள்
நாணம் கொஞ்சும்
இமை போர்த்திய விழிகளால்...

அணு ஆயுதத்தை எதிர்ப்பவனைக்
கண்டால் கூறுங்கள்...
இங்கு ஒருத்தி
அணு அளவும் அசைவில்லாமல்
தீவிரவாதம் புரிகிறாள் 

அவள் கண்களால் என்று...

நங்கை நின்னினைவை நாடியெல்லாம் கண்டேன்



 உன் முகத்திலிருந்து விழும்
அந்த ஒரு சொட்டு
நீர்த்துளிக்காக

என் பரிசத்தை மட்டுமல்லாது
என் மனதினையும் பாழாக்கும் 
உந்தன் ஈராக் கூந்தலுக்காக

உலக மலர்களைக் காட்டிலும்
உன் மலர்கள் கொண்ட
வாசத்திற்காக

பருவத்தினை பகிர்ந்தளிக்கும்
பருவம் படர்ந்த கன்னத்தின்
பருக்களுக்காக

என் விழி தீண்டும் வேளை
உன் சினம் மிகுந்த மேனியின்
அந்த சிறு சிலிப்பிற்காக

சிறைவாசமிட்ட உன் மார்பு
பள்ளத்தாக்கின் நடுவில் புதைந்த
நிமிட துடிப்பிற்க்காக

உன் அன்பின் மொத்த
சுமைத்தாங்கியாக இருக்க
உயிர் உள்ளளவும் கொண்டேன்

உன் சிற்றேரும்புப் பார்வையில்
சிதறிப்போகும் எந்தன்
சில்லென்ற நினைவுகளுக்காக

காதோரம் என் காதல் பேசும்
உன் தங்கச் சிமிழின்
கர்வத்திற்க்காக

கன்னி நின் கர்வம் மிகுந்த
கண்ணோரக் கவிபாடும்
கள்ளப் பார்வைக்காக

காலமெல்லாம் கொண்டேன்
நங்கை நின்னினைவை
நாடியெல்லாம் கண்டேன்

Friday 1 November 2013

காதலின் கருக்கள்

உணர்ந்தப் பொழுது
என்னுள் உணர்ச்சியே 

இல்லை.... 
 

பெண்ணே...!
நீ...
என் காதலின் கருக்களை

தெருவினில் வீசிவிட்டு
நடந்தப்பொழுது...

காதல் சங்கம்

காதல் தோல்வி தந்து
கலகமூட்டியவளே
கழகத்தின் தலைவர்
நானாம்...
உன்னால் இதயம் இழந்தச் 
சங்கத்திற்கு

உறுப்பினர் அட்டை அடிக்க
ஊரெல்லாம் முடியவில்லை
உன்னால் இதயம் இழந்தவர்களுக்கு

Wednesday 30 October 2013

ரத்தச் சரித்திரம்




தாளில் படைத்திட்ட 
சரித்திரம் அல்ல
குருதியில் குளித்திட்ட 
ரத்தச் சரித்திரம்

இது தமிழனின் 
தாயகச் சரித்திரம் 

புல்லென நீ நினைத்துவிட்டாய் 
பொசுக்கென பிடிங்கிட
கனவும் கண்டுவிட்டாய்
கனவு கலைந்தப்பின் 
உன் கண்களும் மிரளுமடா
என் தாய் மண்ணில் 
மலர்ந்திட்ட மலரும்
உன் தலை கொய்ய நிற்குமடா

கொஞ்சம் பொறு
மாமிச பிண்டமே...

செங்குருதியில் பிறந்திட்ட
வீரம் இன்னும் 
சோர்ந்துவிடவில்லை 
பிஞ்சு பிரவாகத்தில் 
நான் வீரிட்ட சத்தம் 
வலியினால் அன்று
என் தமிழன் மானம் காக்க 
அன்றே உரைத்திட்ட உரை அன்றோ...

வெற்றி காணாது புதைந்துதான் போயின 
என் சகோதரதீரங்கள் 
என எவர் உரைத்துத் தான் 
சென்றிடினும்
தாய் தந்த தேகம்
புதைந்துதான் போயினும்
புரட்சித் தான் புரளாதோ
இப்பாரினில் நான் காணும்
தமிழீழம் நிலைபெரும்வரை

 
நிலை கொள்ளும் காலம் வரை
என் மனமிங்கு வீழாதே
சண்டாளர்களின் சாவு காணும் வரை
என் தமிழன் தலை சாயாதே

சின்னச் சின்ன துளிகள்




கரை மோதும்
கடலலைகள்
காதலின் ஊடல்கள்




பூக்களுக்குள்ளும்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
மகரந்தத்தூள்




மூச்சு முட்டக் குடித்தப்பின்
போதையில் கிறுக்குகிறான்
தாளில் கவிதைகள்
எழுதுகோல்




தாலாட்டுக் கீர்த்தனைகளுடன்
தலை சாயிக்க மடிதந்தாள் தாய்
பேருந்தின் சன்னலோரம்




ஓராயிரக் கனவுகளுடன்
ஓரங்க நாடகங்கள் உன்னுடன்
கண் மூடிய வேளையிலே




ஆடம்பரம் இல்லாத கலைக்கூடம்
வெந்தாமரையில் சரஸ்வதி
சாலையோர ஓவியம்