Wednesday 30 October 2013

ரத்தச் சரித்திரம்




தாளில் படைத்திட்ட 
சரித்திரம் அல்ல
குருதியில் குளித்திட்ட 
ரத்தச் சரித்திரம்

இது தமிழனின் 
தாயகச் சரித்திரம் 

புல்லென நீ நினைத்துவிட்டாய் 
பொசுக்கென பிடிங்கிட
கனவும் கண்டுவிட்டாய்
கனவு கலைந்தப்பின் 
உன் கண்களும் மிரளுமடா
என் தாய் மண்ணில் 
மலர்ந்திட்ட மலரும்
உன் தலை கொய்ய நிற்குமடா

கொஞ்சம் பொறு
மாமிச பிண்டமே...

செங்குருதியில் பிறந்திட்ட
வீரம் இன்னும் 
சோர்ந்துவிடவில்லை 
பிஞ்சு பிரவாகத்தில் 
நான் வீரிட்ட சத்தம் 
வலியினால் அன்று
என் தமிழன் மானம் காக்க 
அன்றே உரைத்திட்ட உரை அன்றோ...

வெற்றி காணாது புதைந்துதான் போயின 
என் சகோதரதீரங்கள் 
என எவர் உரைத்துத் தான் 
சென்றிடினும்
தாய் தந்த தேகம்
புதைந்துதான் போயினும்
புரட்சித் தான் புரளாதோ
இப்பாரினில் நான் காணும்
தமிழீழம் நிலைபெரும்வரை

 
நிலை கொள்ளும் காலம் வரை
என் மனமிங்கு வீழாதே
சண்டாளர்களின் சாவு காணும் வரை
என் தமிழன் தலை சாயாதே

No comments:

Post a Comment