Tuesday 8 October 2013

கொண்ட காதல் குடிகொண்டது இங்கே....




காதல் ...
காற்றினுள்ளேயும்
மூச்சுக்காற்றைப்
புகுத்தவல்லது

காதல்...
காமத்திலும்
கண்ணியத்தன்மை
கொண்டது

காதல்...
உயிர்க் கூட்டிலும்
உந்தன் நினைவுகளை
நீங்காது பெற்றது

காதல்...காதல்...காதல்..

கன்னி நின்னேழிலையும்
நிந்தன் நீலவிழிப் பார்வையையும்
கடைக்கண்ணோர
கிள்ளிவிளையாடும்
சிறு விசையும்
விசத்தறி நெய்கிறது
நெஞ்சு விம்மி விம்மி
விழுகிறது ...

நீ நின்று விட்டப்போன
உன் பாதம் பதிந்த
கரிசல்காட்டுப்
பூமியிலே.......

நீ வீசிவிட்டுப்போன
மலர் எழுந்து
மரணப்படுக்கைக்கு
செல்லும் வழிப் பார்த்து...

No comments:

Post a Comment