Thursday 5 June 2014

கவிச்சரம் : கவிதைகளின் தொகுப்பு (தொடர் பதிவு) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

கவிச்சரம் : கவிதைகளின் தொகுப்பு (தொடர் பதிவு) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

தமிழ் நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கங்கள் .......!

இப்பதிவானது உறுப்பினர்களின் கவிதைகளைக் கொண்டு பூச்சரம் போல கவிதைச்சரமாக தொடுக்கப்போகிறது.உறுப்பினர்கள் தங்களின் சொந்தக் கவிதைகளை மட்டும் பதியவும்.

குறிப்பாக பின்னூட்டம் ஏதும் இட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேம்.

கவிதைகளின் வரி அமைப்பானது மிகக் குறைவாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டுகிறோம்.


இடுப்பில் இருந்த
மஞ்சள் நிறத் துண்டால்
காலுக்கடியில் இருந்து
ஒரு கைப்பிடி மண்ணெடுத்து
முடிந்து வைத்துக்கொண்டான்
ஒரு விவசாயி.

சிமிட்டி சுவர்களுக்குள்
புதையுண்ட
தனது...
பூமித்தாயின் நினைவாய்


---------------------------------------------------

பூமித்தாயின் நினைவாய்
புழுதி காடெல்லாம்
உழுது போட்டு வைத்து
அழுது தொழுது நிற்கிறோம்
பழுதாகி போன மழையை எண்ணி ...
உழுத வயல் எல்லாம்
அழுத கண்ணீர் பாய ....


---------------------------------------------------

அழுத கண்ணீர்
ஆறாகப் பாய
ஆறாத உள்ளம்
அவளையே எண்ண
அன்றிலிருந்து இன்றுவரை
உடல் சுவரில்
முட்டி முட்டி
அழுதுகொண்டே இருக்கிறது
ரத்தில் குளித்த்தப்பின்னும்
இருதயம்

பூவிரல் துடைக்க வரும்
என எண்ணியே


--------------------------------------------------

பூவிரல் துடைக்க வரும்என எண்ணியே
பூத்திருந்த காலங்கள் எல்லாம்
புண்ணாகி போனதே
புன்னகைகள் எல்லாம் புதைத்தாய்
புழுவாக துடிக்கின்றேன்
பூவாக சிரிக்கிறாய் நீயோ ..

பொழுதெல்லாம் போக்கினேன்
பொன்னான காலங்கள் போக்கினேன்
பொழப்பெல்லாம் போக்கினேன்
பெண்ணான உன்னை நோக்கிய
பொன்னான காலம் முதலாக .... 


----------------------------------------------------

FOR CONTINUE......   

கவிச்சரம் : கவிதைகளின் தொகுப்பு (தொடர் பதிவு) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
 

No comments:

Post a Comment