Wednesday 30 October 2013

ரத்தச் சரித்திரம்




தாளில் படைத்திட்ட 
சரித்திரம் அல்ல
குருதியில் குளித்திட்ட 
ரத்தச் சரித்திரம்

இது தமிழனின் 
தாயகச் சரித்திரம் 

புல்லென நீ நினைத்துவிட்டாய் 
பொசுக்கென பிடிங்கிட
கனவும் கண்டுவிட்டாய்
கனவு கலைந்தப்பின் 
உன் கண்களும் மிரளுமடா
என் தாய் மண்ணில் 
மலர்ந்திட்ட மலரும்
உன் தலை கொய்ய நிற்குமடா

கொஞ்சம் பொறு
மாமிச பிண்டமே...

செங்குருதியில் பிறந்திட்ட
வீரம் இன்னும் 
சோர்ந்துவிடவில்லை 
பிஞ்சு பிரவாகத்தில் 
நான் வீரிட்ட சத்தம் 
வலியினால் அன்று
என் தமிழன் மானம் காக்க 
அன்றே உரைத்திட்ட உரை அன்றோ...

வெற்றி காணாது புதைந்துதான் போயின 
என் சகோதரதீரங்கள் 
என எவர் உரைத்துத் தான் 
சென்றிடினும்
தாய் தந்த தேகம்
புதைந்துதான் போயினும்
புரட்சித் தான் புரளாதோ
இப்பாரினில் நான் காணும்
தமிழீழம் நிலைபெரும்வரை

 
நிலை கொள்ளும் காலம் வரை
என் மனமிங்கு வீழாதே
சண்டாளர்களின் சாவு காணும் வரை
என் தமிழன் தலை சாயாதே

சின்னச் சின்ன துளிகள்




கரை மோதும்
கடலலைகள்
காதலின் ஊடல்கள்




பூக்களுக்குள்ளும்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
மகரந்தத்தூள்




மூச்சு முட்டக் குடித்தப்பின்
போதையில் கிறுக்குகிறான்
தாளில் கவிதைகள்
எழுதுகோல்




தாலாட்டுக் கீர்த்தனைகளுடன்
தலை சாயிக்க மடிதந்தாள் தாய்
பேருந்தின் சன்னலோரம்




ஓராயிரக் கனவுகளுடன்
ஓரங்க நாடகங்கள் உன்னுடன்
கண் மூடிய வேளையிலே




ஆடம்பரம் இல்லாத கலைக்கூடம்
வெந்தாமரையில் சரஸ்வதி
சாலையோர ஓவியம்

இனி நீயல்ல என் காதலி...




இனி நீயல்ல என் காதலி

முட்களையே முழுவதுமாய்க் கொண்ட
முழுமதியே இனி 
நீயல்ல என் காதலி 

உன்னிடம் புரியாத 
எனது அன்பிற்கு 
என் புலம்பல்கள் மட்டுமே 
அர்ச்சனைகள் இனி 

மன்னித்துவிடு - ஆம்
என்னை
மன்னித்துவிடு 
எதுவும் அறியா 
மாமடந்தையே 
என்னை மன்னித்து விடு

உன்னைத்  தவிர 
பிறிதொரு அறியா
இம்மூடனை 
மன்னித்துவிடு

இன்று என் வாழ்வில் 
முக்கியமான நாள் 
உன்னை மறவேன் 
என்ற வாயால் 
இதையும் கூறுகிறேன் 
மறந்துவிட்டேன் -உன்னை
முழுதும் மறந்துவிட்டேன் 

இனி நீயல்ல 
நீ அல்லவே அல்ல
என் காதலி


கன்னி உந்தன்
கூந்தலில் இருந்து விழும்
பூக்களின் சருகுகள் 
மட்டுமே 
என் அன்பின் கவித்துவம்
முற்றிலும் அறிந்தவை 

ஆம் ...
அவைதான்
உன்னைவிட
என் காதலை அதிகம்
உணர்ந்தவை

இனி நீயல்ல என் காதலி

Tuesday 29 October 2013

என் வீட்டின் முகட்டில்...




 

குளத்துத் தவளை
கானம் பாடும் வேளையிலே
செஞ்சூரியன் 
செவ்வானம் காட்டி
மறைகையிலே

நிலவானவள் நீலவானம் 
செல்கையிலே
மார்பின் நடுவினிலே 
அமர்ந்துக் கொண்டு

கள்வன் அவன் 
மோகத்தீயில் மூழ்கடித்தான் 

வாரி அணைக்க நினைக்கையில்
வானம் போல் எட்டி நின்று
ஏளனமும் செய்கின்றான்
 
என் வீட்டின் முகட்டில்...