Tuesday 8 October 2013

சாதியின் சவுக்கடி

உலகம் இன்னும்
சற்று நேரத்தில்
கொண்டாடப் போகிறது
காதலர் தினத்தை ...

நான் இப்போதுதான்
கொண்டாடி விட்டு வருகிறேன்
சவ விழாவை.......

ஆம்..........

இதயங்களின் அணிவகுப்பில்
வான் முழுதும்
ரத்தவாடை

வெண்ணிறம் பூண்ட
வெள்ளிநிலவும்
வேறு இடம் புகுந்துக்கொண்டது

பூமாலைப் பொழிந்து
பூத்துப் போனது
விண்மீன்களும்

வாடைக்காற்று முழுதும்
பிண வாடை...
பூமி முழுவதும்
சவம் சென்ற பாதை

உண்மை காதல் பல
ஊமைனாடகம்
அரங்கேற்றுகிறது

உன்னத உயிர்கள்
அங்குமிங்கும்
அலவளாவுகிறது

தாங்கள் சமூகத்தின்
சவக்குழியால்
சாகடிக்கப்பட்டு விட்டோம்
என எண்ணி எண்ணி
சாகிறது....
பல முறை அவரவர்
மனப்புதைக்குழிக்குள்...

No comments:

Post a Comment