Saturday 2 November 2013

நங்கை நின்னினைவை நாடியெல்லாம் கண்டேன்



 உன் முகத்திலிருந்து விழும்
அந்த ஒரு சொட்டு
நீர்த்துளிக்காக

என் பரிசத்தை மட்டுமல்லாது
என் மனதினையும் பாழாக்கும் 
உந்தன் ஈராக் கூந்தலுக்காக

உலக மலர்களைக் காட்டிலும்
உன் மலர்கள் கொண்ட
வாசத்திற்காக

பருவத்தினை பகிர்ந்தளிக்கும்
பருவம் படர்ந்த கன்னத்தின்
பருக்களுக்காக

என் விழி தீண்டும் வேளை
உன் சினம் மிகுந்த மேனியின்
அந்த சிறு சிலிப்பிற்காக

சிறைவாசமிட்ட உன் மார்பு
பள்ளத்தாக்கின் நடுவில் புதைந்த
நிமிட துடிப்பிற்க்காக

உன் அன்பின் மொத்த
சுமைத்தாங்கியாக இருக்க
உயிர் உள்ளளவும் கொண்டேன்

உன் சிற்றேரும்புப் பார்வையில்
சிதறிப்போகும் எந்தன்
சில்லென்ற நினைவுகளுக்காக

காதோரம் என் காதல் பேசும்
உன் தங்கச் சிமிழின்
கர்வத்திற்க்காக

கன்னி நின் கர்வம் மிகுந்த
கண்ணோரக் கவிபாடும்
கள்ளப் பார்வைக்காக

காலமெல்லாம் கொண்டேன்
நங்கை நின்னினைவை
நாடியெல்லாம் கண்டேன்

No comments:

Post a Comment